ரஷ்யாவைப் பற்றி போலி செய்திகளைப் பரப்பினால் 15 ஆண்டுகள் சிறை – ரஷ்யா சட்டம்

0
138

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பினால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடும், அதிபர் புதின் ஒப்புதலோடும் சட்டம் இயற்றப்பட்டது. ரஷ்யா உக்ரைன் இடையே இன்று 10வது நாளாக தொடர்ந்து வரும் போர் சூழலில், ரஷ்யாவானது உக்ரைனின் பல பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் கொத்துக் குண்டுகள் மூலம் மக்கள் வாழும் குடியிருப்புகளைத் தகர்ப்பதாகவும்,பொதுமக்களைத் தாக்குவதாகவும் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறையிட்டுள்ளது. ஊடகங்களிலும் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை அடுத்து ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவசர வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பின்னர் ரஷ்யாவின் போர் முறைகளைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதா இரு அவைகளிலும் அதிபர் புதின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்ய ஊடகங்கள் அனைத்தும் “ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை” என செய்திகளில் குறிப்பிட்டு வரும் சூழலில் உலக முழுவதும் உள்ள ஊடகங்கள் யாவும் “ரஷ்ய படையெடுப்பு ,ரஷ்யா போர் தொடுப்பு” என்று தங்களது செய்திகளில் குறிப்பிடுகின்றன. இதற்கிடையே ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று அவசர சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ராணுவ வீரர்கள் , ராணுவ அதிகாரிகள் மற்றும் உண்மையைப் பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ரஷ்ய விளக்கம் அளித்துள்ளது. இந்த சட்டமானது ஊடகங்கள் மற்றும் தனிநபர் என அனைவருக்கும் பொருந்தும் எனவும் ,இதன் மூலம் ரஷ்யாவின் நடவடிக்கைகளைப் பற்றி போலியாக செய்திகளைப் பரப்புவோருக்கு 3 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்