இளமை முடிநரையை தாமதமாக்க உதவும் அற்புத மூலிகை

0
179

முதுமை அடைந்து விட்டதை குறிக்கும் தவிர்க்க முடியாத ஒரு காரணியாக வெளிப்படுவது நரை முடி,இருப்பினும் முடி நரைப்பது என்பது வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் , தற்போது இளைஞர்களுக்கு கூட ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது: காலப்போக்கில், மயிர்க்கால்கள் குறைவான நிறத்தை உருவாக்கும் நிகழ்வு பொதுவாக 35 வயதிற்குப் பிறகு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும் உணவு, மரபியல் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக, குழந்தைகள் கூட நரை முடியால் பாதிக்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இளைஞர்கள் மட்டுமின்றி சில பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கூட ஏராளமான வெள்ளை முடி இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகின்றது, மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளும் வெள்ளை முடி ஏற்பட முக்கிய பங்கு வகிக்கின்றது.

இருப்பினும் தென்னிந்திய உணவின் இன்றியமையாத அங்கமாக இருக்கும் நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த மூலிகை ஒன்று முடி விரைவாக நரைப்பதை தடுக்க உதவும், இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, ஒருமுறை முடியின் வேர்கள் நிறம் மாற்றம் அடைந்து விட்டால் மீண்டும் அதனை பழைய கருப்பு நிறத்திற்கு கொண்டு வர முடியாது என்பதே? ஆனால் முடி நரைக்கும் செயல்முறை தாமதப்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.

முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் அந்த மூலிகை கறிவேப்பிலை தான்! நரை முடியை பொறுத்தவரை கறிவேப்பிலையில் அடங்கி இருக்கும் வைட்டமின் கலவைகள் முடியின் நிறம் மாறும் செயல்முறையை தாமதப்படுத்த உதவுகிறது; இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மாடெக் ஆராய்ச்சியில் வெளியாகி இருக்கும் ஒரு ஆய்வறிக்கையின்படி, கறிவேப்பிலையின் மேற்பூச்சு பயன்பாடு ( topical use of curry leaves) நிறமிகளை சேதப்படுத்தாமல் முடி வெள்ளையாவதை மெதுவாக்குகிறது.

பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுகள் முடி வெள்ளையாவதற்கு காரணம் என்று குறிப்பிடப்படும் நிலையில், கறிவேப்பிலையில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி, டி, பி மற்றும் இரும்புச்சத்துக்கள் கருப்பாக இருக்கும் முடி விரைவில் நிறம் மாறுவதை தடுக்கிறது; கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி மற்றும் டி உள்ளிட்டவை முடி நிறம் இழப்பதை தடுக்கின்றன.

மெலனின் இழப்பு காரணமாக முடியின் நிறம் மாறுகிறது என்பதால், கறிவேப்பிலையில் இருக்கும் மதிப்புமிக்க ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் பி வைட்டமின்கள் மயிர்க்கால்களில் மெலனின் உற்பத்தியில் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே நரைமுடி ஏற்கனவே உள்ளவர்கள் அல்லது முடியின் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர் உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிட வேண்டும்.

இல்லை என்றால் கறிவேப்பிலையை பொடியாக அரைத்து வைத்து கொண்டு தினமும் தவறாமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதே போல கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயை தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் முடி வெள்ளையாகும் செயல்முறையை தாமதப்படுத்தும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்