கைது செய்தவர்களை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்– ஏபிவிபி எச்சரிக்கை

0
122

மதமாற்ற விவகாரத்தில் அறியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தடை செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து ஏபிவிபி அமைப்பு மாணவர் அமைப்பு சார்பில் முதலமைச்சர் வீடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்கள் போலீசாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து டெல்லியில் உள்ள முதல்வர் தமிழ்நாடு இல்லம் முற்றுகையிட்டு போராட்டம் செய்யப்பட்டது.

ஏபிவிபி அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்