அவதூறு வீடியோவைப் பரப்பும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கலாம் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

0
57

அவதூறு வீடியோ குறித்துப் புகார் அளித்த பின்னரும் அந்த வீடியோவை யூடியூப் சேனலானது நீக்காவிட்டால் அந்த சேனல் மீதும் சேனலின் நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது தெரிவித்துள்ளது.

அவதூறு வீடியோ குறித்த புகாரின் பெயரில் யூடியூப் சேனலை விசாரித்தால் யூடியூப் சேனல் தரப்பினர் எஃப் ஐ ஆரைக் கேட்கும் பழக்கத்தை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்றும் அது மிகத் தவறானது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை குறிப்பிட்டுள்ளது.

யூடியூபர் சாட்டை துரைமுருகனின் பிணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தக் கருத்தைப் பதிவு செய்திருக்கிறது. அவதூறு வீடியோவை நீக்கம் செய்யாவிட்டால் யூடியூபும் குற்றவாளியே எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

விதிகளை மீறும் போது சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கவும் யூடியூப் சேனலை முடக்கவும் யூடியூப் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் யூட்யூபர் சாட்டை துரைமுருகனின் பிணை மனுவை ரத்து செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்