போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரஷ்யாவிற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

0
77

ரஷ்யாவின் “வெளியுறவுத்துறை அமைச்சர்” செர்கி லாரோவ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்ததுடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் ரஷ்யா போரின் தற்போதைய நிலையை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மோடியிடம் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து போரை நிறுத்த இந்தியா எந்த வகையிலும் உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Russian Foreign Minister's visit to focus on India's purchase of discounted  Russian crude oil. Read here

ரஷ்யாவுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி தங்கள் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை நிறுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என அண்மையில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் போர் தொடங்கியது முதல் இதுவரை பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் உடன் 3 முறையும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் 2 முறையும் தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்