தந்தை, தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு

0
161

தனது பெயரையோ, ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடைவிதிக்க கோரி தாய், தந்தை உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, மற்றும் 9ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாகவும், முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், கொடி மற்றும் தனது படத்தை மக்கள் இயக்க நிர்வாகிகள் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்துள்ளார். இந்த நிலையில், தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை விதிக்க கோரி, தன்னுடைய தந்தை, தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்