நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது !

0
129

பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறு பரப்பியதாகக் கூறி நடிகை மீரா மிதுன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நடிகை மீரா மிதுன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளைப் பகிர்ந்தார்.

அவரது செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் அவரது நண்பர் சாம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு இருவரும் ஜாமீனில் வெளி வந்தனர். மேலும் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மீண்டும் நடிகை மீரா மிதுனை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.நடிகை மீரா மிதுனை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை அமர்வு முதன்மை நீதிபதி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்