சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.

0
105

தமிழக சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்துப் பேச தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்துப் பேச வேண்டும் என சபாநாயகர் அப்பாவு விடம் அனுமதி கேட்டார்.

TN Budget Session: AIADMK Protests Against DMK, Stages Walkout From Assembly  - India Ahead

அதற்கு சபாநாயகர், நேற்றே அதிமுகவினர் எழுப்பிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பான கேள்விகளுக்கு முதலமைச்சரும் திமுக அமைச்சர்களும் பதிலளித்து விட்டார்கள் எனவும், மேலும் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் கூறினார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சபாநாயகர் அப்பாவு இருக்கையின் முன்பு சென்று கோஷங்களை எழுப்பி பின் அவையிலிருந்து தற்போது வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்