அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி

0
67

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்தியா. ஒடிசா மாநிலம் பாலஷோரில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி 4 ஏவுகணையானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாக தாக்கி அழித்தது.

தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது கிட்டத்தட்ட 4000 கிலோமீட்டர் தூரம் வரைப் பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது என ராணுவ அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்