கர்ப்பிணிப் பெண்ணை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது.

0
315

சென்னையில் நேற்று இரவு சாலையை சுத்தம் செய்யும் மாநகராட்சி வாகனத்தின் மீது கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. மாநகராட்சி வாகனத்தின் மீது மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் இருவரும் படுகாயமடைந்தனர்.

கர்ப்பிணியும் அவரது உறவினர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்நிலையில் அதில் சிக்கிக் கொண்ட ஓட்டுனர் முருகேசனை அருகில் இருந்தவர்கள் போராடி மீட்டனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழைத்துவரப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்