சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை..!

0
236

உக்ரைன் மீது தொடர்ந்து தீவிரமாக போரை நடத்தி வரும் ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்கள் முழுவதையும் கைப்பற்றவதற்காக முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காகத் தேவையான ஆயுத உதவிகளை அளிக்க சீனாவிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. போரை மேலும் தீவிரப்படுத்த தேவையான பொருளாதார உதவிகளையும், ஆயுத உதவிகளையும் தங்களுக்கு வழங்குமாறு கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவானது சீன அரசிடம் கோரிக்கை வைத்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் “ஜேக் சலிவன்” ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகளை வழங்கினால் அந்நாட்டிற்கு பொருளாதாரத் தடை விதித்தது போல சீனாவிற்கும் பொருளாதாரம் உட்பட பல்வேறு வகையான தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

File Picture

நேட்டோ அமைப்பை விரிவுபடுத்தும் திட்டமே இப்போருக்குக் காரணம் என சீனா அன்மையில் தெரிவித்தது .மேலும் உக்ரைனில் உயிரியல் ஆயுதத் தொழிற்சாலை இருப்பதாகவும் அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டி வருவதை சீனா ஆமோதித்துள்ளது. சீனாவின் இவ்விரு கருத்துகளுக்கும் அமெரிக்க அரசு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இப்படித் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பினால் சீனா மீது பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்க நேரிடும் எனவும் அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

வி.தமிழ்நெறி,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்