அம்மா மினி கிளினிக் கருணை அடிப்படையில் பணி ; அமைச்சர் மா. சுப்பிரமணியன்

0
143

அம்மா மினி கிளினிக் தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணியில் அமர்த்த நடைவடிகை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அம்மா மினி கிளினிக் தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணியில் அமர்த்த நடைவடிகை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய எதிர் கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொரோனா 4ம் அலை வரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் அம்மா கிளினிக் திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது என கூறினார். இதற்கு பதலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,

அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக எடுத்தது அதிமுக அரசுதான். ஓராண்டு கால பணி நிறைவடைந்த போதும் கருணை உள்ளத்துடன் அவர்களுக்கு 3 மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வரும் காலங்களில் அவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி அமர்த்த முதல்வர் நடைவடிக்கை எடுப்பார் என உறுதி அளித்துள்ளார் என்றும், பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அம்மா மினி கிளினிக் என்பது பேரிடர்கால நியமனம் அல்ல, இருந்தாலும் பணி நியமனத்தில் எதிர்காலத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.

பெ.சூர்யா, நெல்லை.


ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்