ஐரோப்பிய யூனியன், உக்ரைனுக்கு ஆயுத உதவி

0
278

ரஷ்யா கொடூரமாக தாக்கி வருவதால் உக்ரைனுக்கு ஆயுதங்களையும் போர் விமானங்களையும் வாங்கி அனுப்ப ஐரோப்பிய யூனியன் நாடுகள் முன் வந்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ஆயுதங்களை உக்ரைனுக்கு கொடுத்து உதவி வருகின்றன. இதனால் ரஷ்யா உலக நாடுகளுக்கு மத்தியில் தனித்துவிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் நீர் மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை ரஷ்ய படைகள் அழித்துவிட்டன. அங்குள்ள உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

உக்ரைனுக்கு உதவி


உக்ரைனைவிட்டு ஆண்கள் வெளியேறக் கூடாது என்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. பெண்களும், குழந்தைகளும் வயதானவர்களும் நாட்டை விட்டு வெளியேறி அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். இந்த நிலையில் ரஷ்யா தாக்குதலை எதிர்கொள்ள ஆயுதங்களையும் போர் விமானங்களையும் அனுப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன் வந்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ தான் காரணமா? - ஓர் பார்வை | Reason for  Russia Ukraine War Explained | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் பிரிவு தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் நாங்கள் ஆயுதங்களைத் தாண்டி போர் விமானங்கள் வரை உக்ரைனுக்கு கொடுத்து உதவவுள்ளோம்.மிகவும் கொடூரமான போரை உக்ரைன் எதிர்கொள்ள தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதே போல் தங்கள் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில் உக்ரைனுக்கு உதவ நாங்களும் முன் வந்துள்ளோம்.

Russia and Ukraine war 2022: Latest updates and fotos from Ukraine-Russia  war - BBC News Pidgin


போர் தாக்குதலால் சிக்கி தவிக்கும் உக்ரைனுக்கு முதல் முறையாக நாங்கள் ஆயுதங்களை வாங்கி கொடுக்க போகிறோம். அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளையும் வலுப்படுத்தி வருகிறோம். ஐரோப்பிய யூனியன்களில் ரஷ்யா டுடேவுக்கும் ஸ்பூட்டினிக் ஒளிபரப்பிற்கும் தடை விதித்துள்ளோம். ரஷ்யாவை எதிர்த்து தைரியமாக போராடும் உக்ரைனுக்கு நாங்கள் உதவுகிறோம் என தெரிவித்துள்ளார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்