ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள ‘சத்தரஸ் கண்டி’ பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

‘இதில் லஷ்கர்-இ-தொய்பா’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர் எனவும் மேலும் அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என்று சந்தேகிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்,
நெல்லை.