குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலி?

0
190

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படைஹெலிகாப்டர் புதன்கிழமையான இன்று மதியம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது, விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத்தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி நரவணே ஆகியோரும் இருந்துள்ளனர்.

நஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 ராணுவ உயரதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – இதுவரை முக்கிய தகவல்கள்

ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 11 பேர் சடலமாக மீட்பு; 3 பேர் குன்னூர் மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல உள்ளனர்.

தற்போது குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – 14 பேரில் 13 பேர் உயிரிழப்பு என தகவல்

சடலங்கள் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட உள்ளதாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்