நெல்லையில் பெண் எஸ்.ஐ.-யை கத்தியால் குத்திய ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

0
71

நெல்லையில் பெண் எஸ்.ஐ.-யை கத்தியால் குத்திய ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு அம்மன் கோவில் கொடை விழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷாவை ஆறுமுகம் என்பவர் திடீரென கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கைப் பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷாதான் என்று சொல்லப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரேசாவை கத்தியால் குத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட ஆறுமுகம், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஆறுமுகம் தொடர்ந்து பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சுத்தமல்லி காவல் ஆய்வாளரின் பரிந்துரையின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்