அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன்

0
393

“ஜெயலலிதா” மரணம் குறித்த விசாரணையை “ஆறுமுகசாமி ஆணையம்” இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ள நிலையில் 2-வது நாளாக இன்று அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமமன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் மூன்று மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்கள். ஏற்கனவே பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் ஆனது பலமுறை சம்மன் அனுப்பி உள்ளது .

ஜெயலலிதா மரணம்: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் : ஆறுமுகசாமி ஆணையம்  உச்ச நீதிமன்றத்தில் தகவல் | Arumugasamy Commission informed Supreme Court  that the Inquiry report will be filed within a month ...

எனினும் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாத சூழ்நிலையில் மீண்டும் ஒரு சம்மன் அனுப்பப்பட்டால் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்பேரில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறி ஜெயலலிதா நினைவிடத்தில் தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 21 ஆம் தேதி நேரில் ஆஜராகி அது தொடர்பான விளக்கங்களை அளிக்க வேண்டும் என தற்போது அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்