ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்.

0
112

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் “அதிமுக ஒருங்கிணைப்பாளர்” ஓ.பன்னீர்செல்வம் தற்போது நேரில் ஆஜரானார். மார்ச் 21ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தது. 2017 ஆம் ஆண்டு ஜெயலிதாவின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நினைவிடம் முன் அமர்ந்து தர்ம் யுத்தம் நடத்தினார். பிறகு “ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி” ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க ஏற்கனவே இருமுறை ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு காரணங்களால் நேரில் வந்து ஆஜராக இயலவில்லை என்று ஆணையத்திற்கு பன்னீர்செல்வத்தின் தரப்பிலிருந்து பதில்மனு அளிக்கப்பட்டது . ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் கர்நாடக சிறையில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் தற்காலிக முதல்வராக இருந்தார். எனவே அவரது வாக்குமூலம் முக்கியமானது என்பதால் இன்று மார்ச் 21ம் தேதி நேரில் வந்து ஆஜராக வேண்டும் என ஆணையத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு 3ஆவது முறையாக அண்மையில் சம்மன் அனுப்பப் பட்டிருந்தது. அந்த சம்மனை ஏற்று தற்போது ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை அளிக்க ஆஜராகியுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்