தொலைந்த அரைமணி நேரத்தில் அழைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவிஆய்வாளர் !

0
192

பேருந்தில் தவறவிட்ட அலைபேசியினை உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் ! நெல்லை டவுண் வ.உ.சி தெருவை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து டவுண் அரசு பேருந்தில் பயணம் செய்தார் டவுண் பொருட்காட்சிச்திடலருகே அவரின் பையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்துவிட்டது கீழே விழுந்ததை கவனிக்காத மாணவர் சிவகுமார் பல இடங்களில் தேடினார். இந்நிலையில் செய்துங்கநல்லூரை சேர்ந்த லெட்சுமி என்பவர் பொருட்காட்சிச்திடலில் கீழே கிடந்த அலைபேசியினை எடுத்து அவ்வழியே ரோந்துவந்த போக்குவரத்துத்துறை காவல் உதவி ஆய்வாளர் தாமரைலிங்கத்திடம் ஒப்படைத்தார். அலைபேசியினை ஒப்படைத்த லெட்சுமியினை காவல்துறை சார்பாக காவல் உதவிஆய்வாளர் பாராட்டினார். மேலும் தொலைந்த அலைபேசியினை தொடர்பு கொண்ட மாணவர் சிவகுமாரினை நேரில் வரவழைத்து அலைபேசியினை அவரிடம் ஒப்படைத்தார்.செல்போன் தொலைந்த அரைமணி நேரத்தில் மீட்டு ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர் தாமரைலிங்கம் மற்றும் அலைபேசியினை கண்டெடுத்து ஒப்படைத்த பெண்மணிக்கும் அந்த மாணவன் நன்றியினை தெரிவித்து சென்றார் இவர்களுடன் தலைமை காவலர் கங்கா உடனிருந்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்