ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் ஒன்பது லட்சம் திருட்டு – “வங்கி ஊழியரே பணத்தைத் திருடியது கண்டுபிடிப்பு” !

0
292

கடலூர் அருகே கேஎன்பேட்டை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. அந்த ஏடிஎம் சார்ந்த வங்கி ஊழியர்கள் நேற்று அந்த இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரூபாய் 9 லட்சம் திருட்டு போனதாக அந்த வங்கியின் மேலாளர் இன்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் நேற்று பணம் நிரப்பிய ஊழியர்களிடமும் விசாரிக்கப்பட்டது. அதன்படி துப்பாக்கி ஏந்திய காவலர், ஓட்டுநர், மற்றும் பணம் நிரப்பும் 2 ஊழியர்கள் என மொத்தம் 4 பேர் பணம் நிரம்பும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அதில் ஒருவர் மட்டும் இரவு 9 மணி அளவில் அங்கு வந்து ஏடிஎம் எந்திரத்தில் 9 லட்சத்து 1000 ரூபாயைத் திருடியதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகுமார் என்ற அந்த ஊழியரிடம் இருந்த ஆறு லட்ச ரூபாயைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மீதி 3 லட்சத்து 1000 ரூபாய் எங்கு உள்ளது என்பது பற்றி தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியரே பணத்தைத் திருடி இருக்கும் செயல் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்