வழக்கறிஞர் வீட்டில் காவல்துறை அத்துமீறல்-கோர்ட் விளக்கம் கேட்பு

0
303

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நேற்று பரபப்பான விசாரணை !

வழக்கறிஞர் வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்ட ஆய்வாளர் சிவபாலனை காணொலி காட்சி மூலம் உடனடியாக ஆஜராக உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவு!

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான ஆய்வாளர் சிவபாலனிடம் நீதிபதி சரமாரி கேள்வி
“எந்த அடிப்படையில் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தினீர்கள்” ? அவ்வாறு சோதனை நடத்த மாஜிஸ்திரேட்டிடம் உரிய உத்தரவு பெற்றீர்களா?”என நீதிபதி காட்டம்!

“மாஜிஸ்திரேட் உத்தரவை பெறவில்லை” மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரிலேயே ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தினேன்” என ஆய்வாளர் சிவபாலன் ஒப்புதல்.

சட்டப்படியான அனுமதி ஏதுமில்லாமல் வழக்கறிஞர் வீட்டில் போலீசார் சோதனை நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் உடனடியாக மாவட்ட எஸ்.பி பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு !

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்