ஆட்டோ திருடர்கள் 5 பேர் கைது

0
225

சென்னையில் ஆட்டோக்களை திருடி அவற்றின் அடையாளங்களை மாற்றி பெயிண்ட் அடித்து வேறு ஆட்டோ போல் மாற்றி விற்பனை செய்ய முயன்ற ஆட்டோ திருடர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் இவர் தனது ஆட்டோவில் யாரோ திருடி சென்று விட்டார்கள் என்று காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அவரது ஆட்டோ அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து வேறு எங்காவது சிசிடிவி கேமரா இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அவரது வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பகுதியைச் சார்ந்த முரளி என்பவர் அந்த ஆட்டோவை திருடி ஓட்டிச் செல்வதை போலீசார் கண்டறிந்தனர். பின்பு அடுத்த சிசிடிவி கேமராக்களை பார்க்கும்பொழுது தொடர்ச்சியாக சந்தோஷ், ஷானவாஸ், குமார் ,என ஒவ்வொருவராக மாறிச் சென்ற ஆட்டோ இறுதியாக ஜனார்த்தனன் என்ற மெக்கானிக் செட்ற்கு சென்றது.

அங்கு ஆட்டோ டிங்கரிங் செய்யப்பட்டு ஆட்டோவில் உள்ள இன்ஜின் நம்பர் மற்றும் ஸ் நம்பர் ஆகியவை கிரைண்டிங் முறையில் அழித்து எடுக்கப்பட்டு வேறு போலி நம்பர் புதிதாக மாற்றப்பட்டு வேறு ஆட்டோ போல் அவற்றினை பெயின்ட் அடித்து மாற்றி இருந்தார்கள்.

மேற்படி ஆட்டோ திருடர்களான முரளி, சந்தோஷ், ஷாநவாஸ், குமார். ஆட்டோ மெக்கானிக் ஜனார்த்தனன் ஆகிய 5 பேர பேர் மீதும் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெ. சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்