பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நிறைவு

0
217

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் – கோலாகலமாக நடைபெற்ற நிறைவு விழா சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றது. கடந்த 4ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழாவின் நிறைவு விழா, பெய்ஜிங் பறவைக்கூடு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவு விழாவையொட்டி, வீரர்கள் அணிவகுப்பும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், பெய்ஜிங்கில் ஏற்றப்பட்டிருந்த ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, அடுத்த குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்