வரட்டு இருமலை நொடியில் போக்கும் அதிமதுரம்..

0
121

ஒரு வகையான வைரஸ் தொற்றினால் தற்போது பெரும்பாலானோருக்கு வரட்டு இருமல் ஏற்படுகிறது..கிராமங்களில் வாழ்பவர்களை விட பெரும்பாலும் நகர்புறங்களில் வாழ்பவர்களுக்கே அதிகமாக வரட்டு இருமல் ஏற்படுகிறது.. இரவு படுத்தவுடன் வரட்டு இருமல் அதிகமாகும். வரட்டு இருமல் உள்ளவர்களுக்கு புகை, தூசி போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும்.. குளிர் வாடைக்காற்றும் பிடிக்காது.. சளி இன்றி வரும் இவ்வாறான வரட்டு இருமலுக்கு தமிழர்களின் தொன்மையான மூலிகையான “அதிமதுரம்” ஒரு சிறந்த தீர்வாகும்..

“அதிமதுரம் என்பது அதிமதுரச் செடியின் வேர்ப்பகுதி ஆகும்”..

இந்த வேர்களை சிறு சிறு துண்டுகளாக்கி எப்போது வேண்டுமானாலும் வாயில் போட்டு மென்று கொண்டே உமிழ்நீரை விழுங்கி வந்தால் உடனடியாக வரட்டு இருமல் குணமாகும். அதிமதுரத்தின் நடு பகுதியில் உள்ள தூளானது இனிப்பும் லேசான துவர்ப்பும் கலந்த சுவையாக இருக்கும்.. மேலும், நீண்ட நேரம் நாக்கிற்கும் தொண்டைக்கும் தித்திப்பைத் தருவதுடன் தொண்டைப் பகுதியில் உள்ள அழுக்கு ,சளி, வைரஸ் போன்றவற்றை உடனடியாக நீக்கி தொண்டைக்கும் நுரையீரலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்க வல்லது.. அதிமதுரத்தை பொடி செய்து தேனீருடனும் கலந்து குடிக்கலாம். குரல் வளத்தை மேம்படுத்தும் தன்மையும் அதிமதுரத்திற்கு உண்டு..உடல் புத்துணர்ச்சி பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதைப் பருகலாம். ..

தமிழ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்