பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பால் அதிர்ச்சி..

0
142

(29-01-2022) நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான “பாரத ஸ்டேட் வங்கி” புதிதாக சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனால் வங்கிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, அங்கு பணிபுரியும் பெண்களில் மூன்று மாதம் நிறைவான கருவுற்ற பெண்கள், மருத்துவ விதிகளின்படி தொடர்ந்து பணிபுரியத் தடை விதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் மூன்று மாதம் கருவுற்ற பெண்கள் தொடர்ந்து பணிபுரிய தடை விதிக்கப்படுவதாகவும் மேலும் குழந்தை பெற்று நான்கு மாதங்கள் கழித்துதான் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என புதிதாக விதிகளை வகுத்து அதில் பணிபுரியும் பணியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. பலதரப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் இதற்கு தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இது அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாடெங்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணிபுரியும் பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு லட்சம் பேர் பெண்கள் எனவும் இந்த அறிவிப்பால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி” ,இந்த அறிவிப்பை வெளியிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவுக்குக் கையெழுத்துப் போட்ட அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்