புதுடில்லியில் பாரதியாரின் நினைவுநாள் நூற்றாண்டு விழா -துணை ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு புகழஞ்சலி.

0
269

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு விழா நேற்று (18.09.2021) தலைநகர் டெல்லியில் மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மரியாதைக்குரிய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களும் கலந்து கொண்டு பாரதியாருக்கு புகழஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினார்கள்.

பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட , பாரதியாரின் பேரன் டாக்டர் திரு. ராஜ்குமார் பாரதி மற்றும், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் திருமதி. சுதா சேஷய்யன் போன்ற ஆளுமைகளை, மரியாதை நிமித்தமாக சந்தித்து ‘தேவேந்திர சேனா’ அமைப்பின் சார்பில் துணைத்தலைவர் கல்வியாளர், முனைவர் டாக்டர் அ.குணசேகரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். உடன் சேனாவின் பொறுப்பாளர்கள் திரு. அ.க. ஸ்டாலின், பா. அருமைத்துரை மற்றும் நிர்வாகிகள் பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்