மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி பிறந்தநாள் – நெல்லை, தூத்துக்குடியில் ‘தேவேந்திர சேனா’ சார்பில் கோலாகல கொண்டாட்டம்

0
179

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி அவர்களின் 57வது பிறந்த நாள் விழாவானது அக்டோபர் 22ல் தமிழகத்தில் ‘தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பாக மிக விமர்சையாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

அதன்படி இன்று ‘தேவேந்திர சேனா’ துணைத் தலைவர், கல்வியாளர், முனைவர் அ.குணசேகர் அவர்கள் தலைமையில், அருள்மிகு நெல்லையப்பர் கோவில் மற்றும் வண்ணாரபேட்டை அருள்மிகு பேராச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை , வண்ணார்பேட்டை முருகன் கோயில் மற்றும் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் , கன்னி விநாயகர் ஆலயம் ஆகிய இடங்களில் வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றது.

அதனை தொடர்ந்து பாளை சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதன் பின் பாளை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கு இனிப்பு, மாணாக்கருக்கு கல்வி உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்சிகள் நடைபெறும்.

மேலும் மேலப்புத்தனேரி அருள்மிகு செல்லம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு, பாறைக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெறுகின்றது.
அதனை தொடர்ந்து நாங்குனேரி மற்றும் திருக்குறுங்குடி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சிகளில் ‘தேவேந்திர சேனாவின்’ சார்பில் 57 கிலோ லட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் 57 மரக்கன்றுகள் கிராமங்களில் வழங்குதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் ‘தேவேந்திர சேனாவின்’ நிர்வாகிகள் அ.க.ஸ்டாலின், பா.அருமைத்துரை, சே.அசோக்குமார், சு.மாரிதுரைசாமி, N.பாஸ்கர், P. பிரகாஷ் ஆகியோர் பங்குபெறுவார்கள். என்பதனை ‘தேவேந்திர சேனா’ அமைப்பு சார்பாக நிகழ்ச்சி நிரலாக தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்