தேவேந்திர குல வேளாளர் கலாச்சார அமைப்பின் தலைவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து…

0
99

தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் கலாச்சார மையம் (DKVCF) தலைவர் கல்வியாளர் குணசேகர் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கை…

தமிழக அரசியலில் அதிரடியாகவும், ஆக்கபூர்வமாகவும் செயலாற்றிக்கொண்டிருக்கும் முன்னாள் காவல் துறை அதிகாரி, தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாகவும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பாகவும் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்குமான வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்து நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை மக்கள் நலத் திட்டங்கள், வெளியுறவுக் கொள்கை, நிதித் துறை, பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை அனைத்து துறைகளிலும் எண்ணற்ற மாற்றங்கள் செய்து இந்த நாடு ஒரு பலமிக்க வல்லரசு நாடாக திகழ இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

கொரானா பெருந்தொற்று காலத்தில் உலக வல்லரசு நாடுகள் கூட திணறிய‌ வேளையில் மிகச்சரியான நேரத்தில் தடுப்பூசியை கண்டுபிடித்து தன் நாட்டு மக்களுக்கு இலவசமாக அளித்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து உலக தலைவர்கள் மத்தியில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக பாரத பிரதமர் திகழ்கிறார்.

அவரது வழியில் முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்று மிகச் சிறப்பான முறையில் தமிழக பாஜகவை புதிய பரிணாமத்தில் தமிழக மக்களிடையே அறிமுகம் செய்து “இல்லம் செல்வோம், மக்கள் உள்ளம் வெல்வோம்” என்ற முழக்கத்தை முன் வைத்து பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து கிளைகள் அமைத்து கிராமம் முதல் மாநகரம் வரை தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்து தமிழக பாஜகவை அசுர வளர்ச்சி அடைய செய்து வீறுநடைபோட்டு வருகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் சுமார் 100 பேரை அழைத்து அந்த மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளை கேட்டறிந்து சட்ட விதிகளின்படி ஏழு உட் பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று சட்ட திருத்தம் செய்து ஒரு மாபெரும் வரலாற்று சிறப்பை நிகழ்த்தினார். அதுமட்டுமல்லாது பொதுக்கூட்டங்களிலும் அரசு விழாக்களிலும் தொடர்ந்து தேவேந்திர வேளாளர் சமூக பண்பாட்டு வரலாறு மரபுவழிக் கூறுகளை எடுத்துக் கூறி அவர்கள் பண்பாட்டை உயர்த்தி பொது அரங்கில் ஒளிரச் செய்தார். இந்நிகழ்வைத் தொடர்ந்து இந்த மக்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக திரு.அண்ணாமலை அவர்கள் பதவி ஏற்ற பிறகு அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஆரோக்கியமான சூழலை தமிழ்நாட்டில் நிலவச் செய்து வந்துள்ளார். மேலும் அண்ணாமலை அவர்கள் பதவி ஏற்ற பிறகு தமிழகத்தில் தேசியக் கட்சியின் வளர்ச்சி ஒரு அசுர வேகம் எடுத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

“நம்மில் ஒருவர், நமக்காக ஒரு தலைவர்” ஊழலற்ற லஞ்சமற்ற ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முன்வரும் தலைவரை எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு நன்கு படித்து பண்பான ஒரு ஆளுமை தலைவராக அண்ணாமலை.
இன்று தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாகவும் நெஞ்சுரம் கொண்ட துணிச்சல் மிக்க ஒரு நல்ல செயல் வீரராகவும் அண்ணாமலை அவர்கள் திகழ்ந்து வருகிறார்.அவருக்கு மீண்டும் தேவேந்திரகுல வேளாளர் கலாச்சார மையம் (DKVCF) சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


செய்தி,

ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்