தியாகி இம்மானுவேல் சேகரனார் 97 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாஜக மாநில நிர்வாகி காயத்திரி ரகுராம் பங்கேற்பு

0
220

தமிழகம் முழுவதும் இன்று தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 97வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ‘தேவேந்திர சேனா’ அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி சேகர், பொதுச்செயலாளர் பேராசிரியர் மனோகர், பொருளாளர் வேளச்சேரி ரவிசங்கர், ஆகியோரின் ஒப்புதல் மற்றும் ஆலோசனையின்படி தியாகியார் இம்மானுவேல் சேகர் பிறந்தநாளான இன்று, ‘தேவேந்திர சேனாவின்’ துணைத்தலைவர் கல்வியாளர் அ.குணசேகர் அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் குழு, இம்மானுவேல் சேகரனார் திருவுருவத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது. இந்நிகழ்வில் பாஜக மாநில நிர்வாகி செல்வி காயத்திரி ரகுராம் கலந்துகொண்டு தியாகியாருக்கு மலர்தூவி சிறப்பு செய்தார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் கலை இலக்கிய பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வருபவர். தமிழக சினிமாத்துறையில் நடன ஆசிரியராகவும், சினிமா நட்சத்திரமாகவும் விளங்கிவரக்கூடிய மரியாதைக்குரிய காயத்ரி ரகுராமை அவர்களுடைய அலுவலகத்தில் சந்தித்த ‘தேவேந்தர சேனா’ நிர்வாகிகள் இன்று தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 97-வது
பிறந்தநாளில் தியாகியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மரியாதை செலுத்தி, அவரது தியாகவரலாறுகளை நினைவுகூர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர சேனாவின் துணைத்தலைவர் , கல்வியாளரும், முனைவருமான திரு. அ.குணசேகர் அவர்களும், தொழிலதிபர் திரு அ.க.ஸ்டாலின் அவர்களும், திரு.மா.வள்ளால சேகர் அவர்களும் மற்றும் திரு. பெ.அசோக்குமார் அவர்களும் உடனிருந்தனர்.

இச்சந்திப்பின்போது கடந்த 17 அன்று பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை நதிபூஜை,கோமாதா பூஜை, அன்னதானம் என பல்வேறு வகையில் சிறப்பித்து கொண்டாடியமைக்கு பாஜக மாநில நிர்வாகி காயத்திரி ரகுராம் நன்றி கலந்த பாராட்டுக்களை ‘தேவேந்திர சேனா’ நிர்வாகிகளிடம் பகிர்ந்துக்கொண்டார்.மேலும் இதுபோன்ற நற்காரியங்களையும், சமுதாயப்பணிகளையும் தொடர்ந்து அரங்கேற்றும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்