சென்னையில் வரும் 25ஆம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

0
127


சென்னையில் வரும் 25ம் தேதி “பாஜக மாநிலத் தலைவர்” அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது. 2022 -2023 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் ஆனது தமிழகத்துக்கு துளியும் பொருத்தம் இல்லாத பட்ஜெட் எனவும் மக்களுக்கு இந்த பட்ஜெட் ஆல் எந்த பயனும் இல்லை எனவும் கூறி, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மேலும் அனைத்து துறைகளிலும் தமிழகத்தை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட்டாக இது இருக்கிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்