நெல்லைக்கு பாஜக மாநில துணைத்தலைவர் திரு சுதாகர்ரெட்டி வருகை

0
155

அரசியல் பயணமாகவும், பாஜக கட்சியின் வளர்ச்சியை தென்னகத்தில் வலுப்படுத்தவும், வியூகம் வகுக்க நெல்லைக்கு வருகை தந்துள்ளார் , பாஜக தேசியத்துணைத்தலைவரும்,
தமிழக பாஜக இணைப்பொறுப்பாளருமான திரு சுதாகர் ரெட்டி அவர்கள், பல்வேறு சிறு,பெரு அமைப்புகளை பாரதியஜனதாவுடன் ஒருங்கிணைத்து கட்சியை மேலும் வலுப்படுத்த ஆலோசித்து வருவதாகவும் தெரிகின்றது.

இந்த அரசியல் சூழ்நிலையில் மரியாதை நிமித்தமாக இன்று நெல்லையில் மதிப்பிற்குரிய பாஜக தேசிய துணைத்தலைவரும்,
தமிழக பாஜக இணைப்பொறுப்பாளருமான திரு சுதாகர்ரெட்டி அவர்களை, ‘தேவேந்திர சேனா’ அமைப்பின் துணை தலைவர் கல்வியாளர்,முனைவர் அ. குணசேகர் அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்கள்.

மேலும் செப்டம்பர் 17ல் திரு.நரேந்திரமோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை வெகு விமர்சையாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ‘தேவேந்திர சேனா’ அமைப்பின் சார்பில் மிகச் சிறப்பாக நதி வணங்குதல், கோமாதா பூஜை, அன்னதானம் வழங்குதல் மற்றும் மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணம் வழங்குதல், என மிகச்சிறப்பாக கொண்டாடிய நிகழ்சிகளை பற்றி புகைப்படத்தொகுப்புடன் எடுத்துரைத்தார். சந்திப்பில் பாஜக மாநில துணைத்தலைவரும்,பாஜக சட்டமன்ற குழுத்தலைவருமான நயினார் நாகேந்திரன் , பாஜக யுவமோர்ச்சாவின் தேசியத்துணைத்தலைவர் திரு ஏ பி முருகானந்தம் , நெல்லை மாவட்டத்தலைவர் திரு மகாராஜன், மற்றும் ‘தேவேந்திர சேனா’ பொறுப்பாளர்கள் அ.க. ஸ்டாலின், பா.அருமைத்துரை, சு.மாரிதுரைசாமி, N.பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். உள்ளாட்சித்தேர்தலில் பாஜகவுடனான தங்கள் ஆதரவு நிலைப்பாட்டையும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்