பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு…

0
156

புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மொத்தம் 51 வார்டுகள் கொண்டதாகும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சூழலில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளிலும் இதுவரை 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று அனைத்து வேட்பு மனுக்களும் இறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று வேட்பு மனுக்கள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்பட்டன. இதற்காக அனைத்து கட்சியிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்புமனு மறுபரிசீலனை நடைபெறும் இடத்தில் குவிந்தனர்.

அனைவரும் ஒரே நேரத்தில் அங்கு குவிந்ததால் கொரோனா பெருந் தொற்றைக் காரணம் காட்டி காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வேட்பாளர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதியளித்தனர். அப்போது பாஜகவை சேர்ந்த 19 ஆவது வார்டு பெண் வேட்பாளரின் கணவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. “வேட்பாளரான தனது மனைவி கையில் குழந்தையை வைத்திருப்பதால் தன்னையும் உள்ளே அவருடன் செல்ல அனுமதிக்குமாறு காவல்துறையினரை அவர் கேட்டுக் கொண்டும், காவலர்கள் அனுமதி வழங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது”. குழந்தையையாவது தன் மனைவியிடமிருந்து வாங்கிக் கொடுங்கள் என காவலர்களின் அவர் முறையிட்டும், அதற்கும் காவலர்கள் செவிசாய்க்காததால் வாக்குவாதம் முற்றி கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அவ்விடத்தில் பதற்றம் நிலவியது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்