தனிப் பெரும்பான்மையுடன் உத்திரப் பிரதேசத்தைக் கைப்பற்றியது “பாரதிய ஜனதா”..!

0
146

இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்திரப் பிரதேச மாநில சட்ட மன்றத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையும் நிறைவுறும் தருவாயில் உள்ளது. ஆரம்பம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்த பாஜக தற்போது தனிப் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது .மொத்தம் 403 சட்ட மன்றத் தொகுதிகளைக் கொண்ட உபி யில் 268 தொகுதிகளில் பாஜக முன்னிலைப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது . உபி யில் தொடர்ந்து 2ஆவது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . 2ஆவது முறையாகவும் “யோகி ஆதித்யநாத்” முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . உபியில் தொடர்ந்து 2ஆவது முறையாக முதல்வராகும் பெருமைக்கு சொந்தக்காரராகிறார் யோகி ஆதித்யநாத் .இதற்கு முன் உபியில் 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து 2ஆவது முறையாகவும் முதல்வரானவர் யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

UP Phase 3 Election 2019: State to vote for 10 constituencies today; here's  everything you need to know - BusinessToday

எனினும் இதற்கு முன் உபி யில் பாஜக கைப்பற்றிய 312 தொகுதிகளைக் காட்டிலும் இம்முறை கைப்பற்றியுள்ள தொகுதிகள் மிகக் குறைவு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.இதற்கு அகிலேஷ் யாதவின் தீர பாஜக எதிர்ப்பு பரப்புரையும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது . இந்த தேர்தலில் “அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாடி கட்சி 130 தொகுதிகளிலும் ,காங்கிரஸ் 2 இடங்களிலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது . காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் இத்தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன .பாஜக வின் இந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்