பாலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர் பப்பிலஹரி காலமானார்.

0
174

1973 ஆம் ஆண்டு வெளியான “அயம் எ டிஸ்கோ டான்சர்” என்ற பாட்டின் மூலம் நாடெங்கும் பிரபலமானார் “பப்பிலஹரி”. தமிழில் 1985 ஆம் ஆண்டு வெளியான “பாடும் வானம் பாடி” என்ற படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். பாலிவுட் திரையுலகில் பல பிரபலமான பாடல்களுக்கு இசையமைத்தவர் என்பதோடு சிறந்த பாடகராகவும் விளங்கினார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் க்ரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. தீவர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரபல பாடகியான “லதா மங்கேஷ்கர்” உயிரிழந்த நிலையில் தற்போது பப்பிலஹரியும் காலமான நிகழ்வு திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தமிழ், நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்