முன்கள பணியாளருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

0
180

முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும், 60 வயதைக் கடந்தவர்கள்,இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜன.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இணை நோய் உள்ளோர் பூஸ்டர்தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: நாட்டில் இதுவரை 90% மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர், இதுவரை 60% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன – பிரதமர்.

ஜன.3ம் தேதியில் இருந்து 15 -18 வயது உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும், இந்தியாவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி இருக்கிறது, நமது பொருளாதாரமும் சீரான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது – பிரதமர், மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி பேச்சு, உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது – பிரதமர் மோடி; பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் – பிரதமர், ஒமைக்ரான் வைரஸை கண்டு பீதியடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள், இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயாராகவுள்ளன – பிரதமர், குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, 500000 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் இப்போதும் இருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்