பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

0
282

டெல்லி: உலகம் முழுவதும் இந்திய நடனக் கலைக்கு தனித்துவமான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் பண்டிட் பிர்ஜு மகராஜ் என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல கதக் கலைஞர் மற்றும் இசைக் அமைப்பாளர், பாடகர் என்ற பன்முகத் திறமை கொண்ட பிர்ஜூ மகாராஜ் அவர்கள் அவரது 83ஆவது வயதில் மாரடைப்பால் நேற்று இரவு அவரது வீட்டில் மரணமடைந்தார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் பிறந்த பிர்ஜு மகராஜ் அவர்கள் சிறந்த கதக் கலைஞர், இசை அமைப்பாளர் மற்றும் பாடகராகவும் சிறந்து விளங்கி 2016இல் பிலிம்பேர் விருது வாங்கியதோடு பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆக திகழ்ந்தார். அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் ஐந்து பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் தனது குடும்பத்தோடு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்றிரவு குடும்பத்தாரோடு உணவருந்திவிட்டு அந்தாச்சரி விளையாடிக்கொண்டிருந்தார் அப்பொழுது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பிர்ஜூ மகராஜ் அவர்கள் மயங்கிய நிலையில் கீழே சரிந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது குடும்ப உறுப்பினர்கள், ஏற்கனவே பிர்ஜு மஹராஜ் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸிஸ் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததாகவும், மாரடைப்பு பிரச்சனையும் அவருக்கு ஏற்கனவே இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக அவர் இறந்து இருப்பது அறிந்த கலையுலகத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்