சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

0
176

(ஜனவரி 28.2022) விருதுநகர்,

விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.31 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு வழங்க வேண்டும்,மருத்துவ காப்பீடு உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவா, மாவட்ட தலைவர் மகாலட்சுமி விளக்கவுரையாற்றினர். ஓய்வு பெற்ற நல அமைப்பு நிர்வாகி தங்கப்பழம், மண்டல உதவி தலைவர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மண்டல செயலாளர் வெள்ளத்துரை நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆ.அருண்பாண்டியன், மதுரை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்