சுக்கிர பகவான் ஜாதகத்தில் வலுவிழந்தவர்கள் வைரம் அணியலாமா?

0
563

வைரமானது விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றாகும், இது உங்களுக்கு பொருத்தமாக இருந்தால், உங்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை, ஆரோக்கியமான உடல், கவர்ச்சிகரமான கண்கள் மற்றும் உங்கள் ஹார்மோன் அமைப்பை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். இது உங்கள் ராசிப்படி பொருத்தமில்லாத கல்லாக இருந்தால் இது நிறைய சிக்கல்களைக் கொண்டு வரும்.

இது உங்கள் உடலில் கொழுப்பைஅதிகரிக்கும், உங்களுக்குள் கோபஉணர்வைத் தூண்டும், உங்கள் நண்பர்களை உங்களிடம் இருந்து பிரிக்கும், விபத்துக்களைக் கூட ஏற்படுத்தும்
வைரத்துடன் தொடர்புடைய நம்பிக்கைகள்
வைரங்கள் பாரம்பரியமாக நிச்சயதார்த்தம் மற்றும் திருமணமோதிரங்களில் பயன்படுத்த ப்படுகிது. இவை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாசத்தை அடையாளப்படு த்துவதாகவும், ஒரு ஆணின் தைரியத்தையும் ஒரு பெண்ணில் பெருமையையும் தூண்டுவதாக வும் கூறப்படுகிறது.

தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள ஒரு வைரமானது துரோகம் செய்யும் மனைவியைக் காட்டிக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
வைரங்கள் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் ஜோதிடத்தின்படி வைரம் உங்கள் ராசிக்கு பொருத்தமாக இருந்தால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். அனைவருக்கும் வைரம் பொருந்தும் என்று கூறமுடியாது, ஏனெனில் வைரம் அணிந்தபின் சிலர் பல துன்பங்களை அனுபவிப்பார்கள். திருமண தோல்வி, தொழில் நஷ்டம், குடும்பத்தில் விரிசல், ஆரோக்கிய கோளாறு என பல பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது.


மேஷம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் வைரம் அணிவதை தவிர்க்கவேண்டும். இவர்கள் வைரம் அணிவது அவர்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தையும், குழப்பங்களையும் உண்டாக்கும்.
வைரத்தின் குணப்படுத்தும் சக்தி பாலியல் குறைபாடுகள், ஆண்மைக்குறைவு, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்சினைகளை வைரம் குணப்படுத்துகிறது. சுக்கிரனால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க தரமான வைரங்களை அணியவும்.


22 வகை ரத்தினக் கற்களை இரு ஸ்லோகங்களில் தருகிறார் வராக மிகிரர்:
வஜ்ரேந்திர நீலசரகதககர்தே பத்மராகருதிராக்யா:
வைடூர்யபுலகவிமலக ராஜமணிஸ்படிக ஸஸிகாந்தா:
சௌகந்திககோமேதகசங்ரவ மஹாநீல புஷ்பராகாக்யா:
ப்ரஹ்மணிஜ்யோதிரஸஸஸ்யகமுக்தாப்ராவாலானி
(இந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சந்தி பிரித்துப் படித்தால் பல ரத்னக் கற்கள் நமக்கு முன்னரே தெரிந்தவை என்பதை உணர்வீர்கள்)
வைரம், நீலம், மரகதம், பச்சைக்கல் (அகேட்), மாணிக்கம், சிவப்புக்கல் (பிளட் ஸ்டோன்),வைடூர்யம், அமெதிஸ்ட், விமலக, ராஜமணி (க்வார்ட்ஸ்), ஸ்படிகம், சந்திரகாந்தம், சௌகந்திகம், ஓபல், சங்கு, நீலநிறக் கல், புஷ்பராகம், பிரமமணி, ஜோதிரஸ, சஸ்யக, முத்து, பவளம்
ஒவ்வொரு ரத்தினக் கல்லுக்கும் யார் அதிதாவதை என்றும் வராஹமிகிரின் பிருஹத் சம்ஹிதா சொல்கிறது.


வெள்ளை நிற அறுகோண வைரம்= இந்திரன்
பாம்பின் வாய் போன்ற கறுப்புநிற வைரம்=யமன்
வாழைத் தண்டு நிறம்= விஷ்ணு
கர்ணிகார பூவின் நிறம்=வருணன்
நீலம்,சிவப்பு கலந்தது= அக்னி
அசோக மலர் வர்ணம்= வாயு
வைரம் கிடைக்கும் இடங்களை இன்னும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:
வேணா நதிக் கரை, கோசலம், சௌராஷ்ட்ரம்,சௌர்பாரதேசம், இமயமலை, மதங்க, கலிங்க, பௌண்டிரதேசங்கள்.
ஜாதியும் வைரமும்
பிராமணர்கள் வெள்ளை நிற வைரங்களை அணியலாம்; சிவப்பு, மஞ்சள் நிறம் க்ஷத்ரியர்களுக்கும், வெள்ளை-மஞ்சள் (சீரிச மலர்) வைரம் வைஸ்யர்களுக்கும், வாளின் நிறம் உடைய வைரம் சூத்திரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லுவார்.


வைரங்களின் எடை, அதன் விலைகள் ஆகியவற்றையும் பட்டியல் இடுகின்றார்,
ஆண் குழந்தை வேண்டுமானால் பெண்கள் வைரம் கண்டிப்பாக அணிய வேண்டும்,
வைரங்கள் பாரம்பரியமாக நிச்சயதார்த்தம் மற்றும் திருமண மோதிரங்களில் பயன்படுத்த ப்படுகிது. இவை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாசத்தை அடையாளப்படு த்துவதாகவும், ஒரு ஆணின் தைரியத்தையும் ஒரு பெண்ணில் பெருமையையும் தூண்டுவதாகவும் கூறப்படுகிறது.


குறையுள்ள வைரங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்
இன்னும் ஒரு ஸ்லோகத்தில் வராஹமிகிரர் செப்புவது யாதெனில்: குறையுள்ள வைரங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்; செல்வம், குழந்தை, குடும்பத்தையே பாதிக்கும்; நல்ல வைரங்களெனில் எதிரிகளை அழித்து வெற்றிக்கொடி நாட்டவைக்கும்; விஷம், இடி, மின்னல் கூட அவர்களைப் பாதிக்காது.

மன்னர்கள் அணிந்தால் கூடுதல் சுகபோகங்கள் கிட்டும்.
வைரம் என்பது தோஷம் இல்லாத வைரமாக இருப்பது அவசியம். செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரங்கள் எந்த ஒரு பலனையும் அளித்துவிடாது.
சுக்கிரன் ராசி அதிபதியாக இருக்கும் ராசிகளான ரிஷபம் மற்றும் துலாம் இருக்கும் சனி பல நல்ல பலன்களை தருவார். அதன்படி மேற்கண்ட இரண்டு ராசி கும்பம் மற்றும் மகரம் அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள் வைரம் அணிந்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் சித்திக்கும்.


அணியும் வைரம் தோஷம் இல்லாத வைரமாக இருப்பது அவசியம். செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரங்கள் எந்த ஒரு பலனையும் அளித்துவிடாது.
எந்த ராசிக்காரர்கள் , லக்கின காரர்கள் வைரம் அணிய வேண்டும் ?
சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிட்டும்.
சுக்கிரன் ராசி அதிபதியாக இருக்கும் ராசிகளான ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு சுக்கிரன் நல்ல பலன்களை தருவார். அதன்படி மேற்கண்ட இரண்டு ராசி கும்பம் மற்றும் மகரம் அல்லது லக்னத்தில் பிறந்தவர்கள் வைரம் அணிந்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் சித்திக்கும்.


கன்னி, மேஷம், சிம்மம் ராசி அன்பர்களுக்கு கூட வரும் பல நல்ல பலன்களை ஏற்படுத்தித் தரும். கன்னி ராசி அன்பர்களுக்கு அதிக நல்ல பலன்களை வைரம் ஏற்படுத்தித் தரும். ரிசப ராசி,துலாம் ராசி, பரணி,பூரம்,பூராடம் நட்சத்திரக்காரர்கள் 6,15,24 இந்த தேதிகளில் பிறந்தவர்கள், இவர்கள் வைரம் அணியலாம்!
முழு ஜாதகம் ஆராய்ந்து ரத்தினம் தேர்வு செய்ய வேண்டும்


ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் கல் போட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சுக்கிரன் யோக்காரராக இருக்கும் லக்கினம் , மகரம் ,கன்னி, ஆகியவற்றில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து காணப்பட்டால் , வைரம் கண்டிப்பாக அணிய வேண்ம் .


ஏன் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வைரம் கண்டிப்பாக அணிய வேண்டும் ?
சுக்கிரன் இல்லற வாழ்வு சோபிக்க செய்பவர். இதனை அறிந்தே , நமது முன்னோர்கள் திருமணத்தின் பொழுது தங்களுடைய மகளுக்கு வைர மோதிரம் , வைர முக்குத்தி , வைர அட்டிகை , வைர நெக்லஸ் , வைர ஒட்டியாணம் , போன்றவற்றை அணிவார்கள். பெண்கள் சீதனத்தில் வைரம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.


குறை இல்லாத வைரம் எது ?
கோடு, கீறல், புள்ளி, பிளவு ஆகியவை வைரத்தில் இருக்கக்கூடாது. அதிக ஒளி, வண்ண ஜாலங்கள், நல்லபட்டைகளின் ஒளிப்பிரதிபலிப்பு ஆகியவை குணங்கள். வைரம் இல்லத்திற்கு வந்தவுடன் பல நல்ல விஷயங்கள் நடப்பது குணங்களின் உடனடிப்பயன்.


ஜாதி வைரம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
நல்லபலன்கள் என்பவை அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். அறிவு பிரகாசிக்கும்,மனம் எப்போதும் அலைபாயாது அமைதியுடன் இருக்கும், எதிலும் அதிர்ஷ்டம் வரும்,கலைகளில் ஈடுபாடும் வெற்றியும் உண்டாகும்,செல்வம் சேரும்,வளம் கூடும், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். எதிரிகள் தோற்று ஓடுவர், செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படும். நல்ல நீடித்த திருமண வாழ்வு கைகூடும்.


ஜோதிட சாஸ்திரத்தின்படி சுக்ரனுக்குரியது வைரம்,சுக்ரன் லக்னாதிபதியாக இருந்தாலும் சுக்ரன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தாலும் வைரத்தை அணிவது அமோகப் பலனைத் தரும், ஆயுளையும் நீட்டிக்கும்.
மேலும் சுக்கிரபகவான் கலைக்கு அதிபதி ஆவார். நடிகர் , நடிகைகள் வைரம் அணிந்தால் , அவர்களின் பெயர் , புகழ் கூடும்,
வைரம் பற்றி
கருட புராணம் ரஸ ஜல நிதி ஆகிய நூல்களில் வரும் ஒரு எச்சரிக்கைக் குறிப்பையும் அறிந்து கொள்வது அவசியம்.
மணமாகி குழந்தைப்பேறு இல்லாதவர்கள் வைரத்தை அணிதல் கூடாது என்பதே அந்தக் குறிப்பு; குழந்தைப் பேற்றை அடைந்தவுடன் அணியலாம்,
வெளி நாடு செல்லும் யோகத்தை தரும், வைரம்
வசீகரமான தோற்றத்தைத் தரும், இதனால் நல்ல அதிர்ஷ்டத்தையும் உருவாக்கும்,வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது,ஆண்- பெண் உறவை வலுப்படுத்தும், நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது.வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்