திமுக,அதிமுக கவுன்சிலர்கள் மீது வழக்குப் பதிவு . கோவை

0
117

கோவை மாவட்டம் வெள்ளலூரில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் தேர்தலின்போது திமுகஅதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பும் மோதிக்கொள்ளும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இதனையடுத்து காலை நடைபெற இருந்த பேரூராட்சித் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.அன்றைய தினமே பிற்பகலில் வெள்ளலூர் பேரூராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.  அப்போதும் திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அடுத்தடுத்து இரு தரப்பினரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்த வாக்குப் பெட்டியினை  சாலையில் தூக்கி வீசினர்.மேலும் வாக்குச் சீட்டுகளும் கிழித்து எறியப்பட்டன.

இதனையடுத்து பிற்பகலில் நடைபெற இருந்த பேரூராட்சித் துணைத் தலைவர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.இதனையடுத்து தேர்தலை நடக்கவிடாமல் தடுத்ததாகத் தேர்தல் அதிகாரி பாலசுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் 6 திமுக கவுன்சிலர்கள் ,8 அதிமுக கவுன்சிலர்கள் , சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் மீது “அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்” உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போத்தனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்