மதுரை சிறைக் கைதிகளுக்கு செல்போன் கஞ்சா சப்ளை – காவலர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகியோரின் வேலை பறிபோனது.

0
149

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா ஆகியவற்றை வழங்கியது தொடர்பான புகாரில் காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அவர்களை பணி நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கைதிகளுக்கு செல்போன் வழங்கி அவர்களை 100 முறைக்கு மேல் பேச வைத்துள்ளதாகவும், கஞ்சா குட்கா போன்ற போதை பொருள்களை அவர்களுக்கு வழங்கி உதவியதாகவும் காவலர்கள் இருவர் மீது புகார் எழுந்ததன் பெயரில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்