கடலோர மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்பு

0
179

★ தமிழகத்தில் வறண்ட காற்று விலகி, ஈரப்பதமான கிழக்கு காற்று தொடங்க உள்ளது.

★ இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்பொழுது சாரல் மழை முதல் லேசான மழை பெய்யும். ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

★ தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களை பொறுத்தவரையில், டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில், லேசானது முதல் ஆங்காங்கே மிதமான மழை பெய்யலாம்.

★ மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சற்றே அதிகரித்து காணப்படும்.

★ மீண்டும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் இரவு/நள்ளிரவு அதிகாலை நேர வெப்பநிலை குறைய தொடங்கும்.

★ 2021 ஆண்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு அளவுகள் குறித்த விரிவான வானிலை தகவல்கள் மற்றும் Pearlcity Weather வானிலை பக்கத்தின் புதிய லோகோ(Logo) டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்