ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் .!

0
282

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வதற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது’. போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்த ஓ. பன்னீர்செல்வம் அவரது சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்கள் ஆகியவற்றை வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்ததால் அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ‘வாக்காளர் மிலானி’ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Create centre in Chennai to study Tamil estampages: HC to Union govt -  DTNext.in
Chennai High Court

மேலும் பன்னீர்செல்வத்தின் தரப்பில் மிலானி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இருதரப்பினரின் மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஏற்றுக் கொண்டு வாக்காளர் மிலானியின் மனுவை நிராகரித்து ‘சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன்’ உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்