சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் டேவிட் கிறிஸ்டியன் காலமானார்

0
140

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் டேவிட் கிறிஸ்டியன் காலமானார், இதற்கு நெல்லை மதிமுக மாவட்டச் செயலாளர் இரங்கல் அறிக்கை தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் டேவிட் கிறிஸ்டின் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்,அன்னாரது ஆத்மா இறைவனின் பாதங்களில் இளைப்பாற நெல்லை மத்திய மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் பிரார்த்திக்கின்றோம்.

தலைவர் வைகோவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட ஓர் உன்னத மனிதர் நீதியரசர், கொரோனா பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு சேவை செய்ய, கே.எம்.ஏ நிஜாம் அவர்கள் பெரும் முயற்சிகள் செய்தவேளையில், தன்னுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்று நிஜாம் அவர்களின் இல்லம் தேடிவந்து ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கொடை வள்ளல், நீதியரசர் டேவிட் கிறிஸ்டின் அவர்கள் கொரோனா பேரலை இரண்டாவது முறையாக உலகை உலுக்கிய போதும் தன்னுடைய பங்களிப்பாக ரூபாய் ஒரு லட்சத்தை நிஜாம் அவர்களின் இல்லம் தேடி வந்து வழங்கிச் சென்றார்கள்.

மறுமலர்ச்சி திமுகவின் மனிதநேய சேவையை, பாராட்டி, பலகாலகட்டங்களிலும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலுக்கும் நிதியளித்த கொடை வள்ளல், நீதியரசர் டேவிட் கிறிஸ்டியன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை நெல்லை மத்திய மாவட்ட மதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பூத உடலுக்கு நெல்லை மத்திய மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் இன்று (03-11-2021) காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கழக கண்மணிகள் வர கேட்டு கொள்கிறேன்.

கே.எம்.ஏ நிஜாம்
மாவட்ட செயலாளர்
ம.தி.மு.க
திருநெல்வேலி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்