“கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் இந்திய தொல்லியல் துறையின் பணிகளுக்குத் தடை”- சென்னை உயர் நீதிமன்றம்..

0
264
Brihadisvara Temple, Gangaikonda Cholapuram Gangai Konda Cholapuram Temple one of great living Chola temples. Tamil Nadu, India

“கங்கை கொண்ட சோழபுரம்” கோயில் வரலாற்று பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாகும்.. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெருவுடையார் கோயிலைப் போன்றே மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த சிவன் கோயிலாகும்.. “இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக “யுனஸ்கோ” அறிவித்துள்ளது”.

தற்போது இந்த கோயிலின் வளாகத்தில் ரூபாய் 3 கோடி செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் ஆகியவற்றை கட்ட “இந்திய தொல்லியல் துறை” திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்லியல் துறையின் இந்த திட்டப் பணிகளுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் “வரலாற்று சிறப்புமிக்க கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்குத் தடை விதிப்பதாகவும், சொந்த விதிகளையே தொல்லியல் துறை மீறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளது”.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்