தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

0
117

வரும் 10ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, நாகை ,மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11ஆம் தேதி தஞ்சாவூர் ,திருவாரூர்,நீலகிரி, கோயம்புத்தூர்,நாகப்பட்டினம், திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் பிப்ரவரி 13ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்