மூன்றாம் பாலினத்தவர்க்கு இலவசக் கல்வி – சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு.

0
97

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவசக் கல்வி வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் தலா ஒரு இடம் அளிக்க தற்போது சென்னைப் பல்கலைக் கழகம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்தவுடன் வரும் கல்வியாண்டில் இத்திட்டம் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்