செஸ் ஒலிம்பியா போட்டி – உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ள “சென்னை”

0
188

ஒலிம்பியா செஸ் போட்டி 1927ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.2022 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பியா செஸ் போட்டி இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நடைபெறவிருக்கிறது. “உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான செஸ் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்”.முதல்முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இப்போட்டி நடைபெற இருப்பதால் சென்னையானது, உலகம் முழுவதும் அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு இணைய வழியில் நடைபெற்ற இப்போட்டியில் “ரஷ்யாவும் இந்தியாவும் கோப்பையைப் பகிர்ந்து கொண்டன”. இந்த ஆண்டுக்கான ஒலிம்பியா செஸ் போட்டியானது ரஷ்யாவில் நடைபெற இருந்ததும், போரின் காரணமாக ரஷ்யாவில் போட்டியை நடத்த முடியாது என “உலக செஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு” தெரிவித்திருந்தது. எனவே, இப்போட்டியைத் தங்கள் நாட்டில் நடத்த பெரும்பாலான நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன.

Chennai Chess blitz | Page 155 | The Times of India
chennai file picture

உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள், பயிற்சி மேலாளர்கள், பார்வையாளர்கள் என சுமார் 3,000 பேருக்கு மேல் இப்போட்டியின் காரணமாக சென்னைக்கு வரவிருப்பதால், விமானப் போக்குவரத்து வசதி, தங்கும் வசதி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு டெல்லி மற்றும் சென்னையில் இப்போட்டியை நடத்த “இந்திய செஸ் கூட்டமைப்பு” சார்பில் பரிசீலிக்கப்பட்டது. இறுதி கட்ட முடிவில் சென்னையில் போட்டி நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “செஸ் ஒலிம்பியா திருவிழாவால் தமிழ்நாடும் சென்னையும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது”. இப்போட்டியை சென்னையில் நடத்துவதால் தமிழ்நாடு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் தொழில் முதலீட்டைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்