வள்ளியூரில் பொதுமக்கள் இரண்டு அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

0
154

ராதாபுரம் ரோடு தெற்கு வள்ளியூர் இணைப்பு சாலையில், தெற்கு வள்ளியூர் பொதுமக்கள் இரண்டு அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

வள்ளியூர் ரயில்வே மேம்பாலப்பணி நடைபெற்றபோது எங்கள் ஊர் வழியாக வந்த பேருந்து ,தற்போது எங்கள் ஊருக்கு வருவதில்லை மீண்டும் இங்கே வந்துச்செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைத்து இரண்டு பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

சம்பவத்தையறிந்த பணகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ஏட்டு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தச்சூழ்நிலையில் தகவல் அறிந்த பணிமனை மேலாளர் பொதுமக்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உங்கள் ஊருக்கு பேருந்து வரவேண்டும் என்று மனு கொடுங்கள், நாங்கள் அதை பரிசீலனை செய்கிறோம், மேற்படி நடவடிக்கை எடுக்கிறோம், என்று சமாதானம் கூறியதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்