‘உங்கள் பகுதிக்கு வந்தால் சாப்பாடு போடுவீங்களா” – முதல்வர் முக.ஸ்டாலின் கேள்வி !

0
134

ஆவடி பகுதியிலுள்ள விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவ மாணவிகளை நேற்று அழைத்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், இன்று காலை அப்பகுதி மக்களிடம் வீடியோ காலில் உரையாடினார். அங்குள்ள விளிம்புநிலை சமூக மக்களிடம் காணொலிக் காட்சி வாயிலாக அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

வீடியோ காலில் முதல்வருடன் உரையாடிய மாணவியொருவர் ,”எங்கள் பகுதிக்கு தாங்கள் கண்டிப்பாக வந்து பார்வையிட வேண்டும் எனவும் எங்களின் கல்வி வீண்போகாமல் இருக்க ST பிரிவில் உள்ள எங்கள் சமூகத்தை MBC பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

கண்டிப்பாக உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பேன் எனவும் கட்டாயம் உங்கள் பகுதிக்கு வருவேன் எனவும் அந்த மாணவியிடம் உறுதி அளித்த முதல்வர் முக.ஸ்டாலின் “வந்தால் சாப்பாடு போடுவீங்களா” என நகைச்சுவையாக கேட்டார். அவரின் கேள்விக்கு அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்