பிரிட்டனில் நடைபெறும் போர் விமானப் பயிற்சியில் இருந்து விலகியது இந்தியா

0
233

பிரிட்டனில் நடைபெறும் போர் விமானப் பயிற்சியில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா அறிவித்த்துள்ளது.
“கோப்ரா வாரியர் -2022” என்ற தலைப்பில் பிரிட்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச போர் விமானப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது . வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவிருந்த அப்போர் விமானப் பயிற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் கலந்துகொள்கின்றன.

இந்தியாவும் இதில் கலந்துகொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போரினால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை சுட்டிக்காட்டி இந்தியா அப்பயிற்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது . இந்தியா சார்பாக “5 எல்சிஏ.தேஜாஸ்” போர் விமானங்கள் பிரிட்டன் போர் விமானப் பயிற்சியில் கலந்து கொள்ளவிருந்தது குறிப்பிடத்தகக்கத்து.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்